• Latest News

    December 28, 2013

    கவனிப்பார் அற்றுக்கானப்படும் கல்முனை மாநகர சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா!கல்முனை மாநகர சபை மேயரின் கவனத்திற்கு!!

    எம்.வை.அமீர்;
    முன்னாள் முதல்வரும் தற்போதைய கல்முனைப் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருமான பாராளமன்ற உறுப்பினர் எச்.எம்.ஹரீஸினால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் முன்னாள் முதல்வரான கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் மெருகூட்டபட்ட சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா (beach pack) தற்போது கவனிப்பார் அற்ற நிலையல், மனிதர்கள் ஓய்வு எடுப்பதற்கு பதிலாக மாடுகள் ஓய்வெடுக்கும் இடமாக மாறியுள்ளது.

    பல இலட்சம் ரூபாய்கள் செலவில் மேறnகோள்ளப்பட்ட இந்த வேலைத்திட்டமானது தொடர்ந்து நடைபெறுமா? அல்லது உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்துமோதல்களினால் நிரந்தரமாக மனிதர்கள் ஓய்வு எடுப்பதற்கு பதிலாக மாடுகள் ஓய்வெடுக்கும் இடமாக மாறிவிடுமா? என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

    பொறுப்புவாய்ந்த நான்கு மாநகர உறுப்பினர்கள் சாய்ந்தமருதில் இருக்கின்ற போதும் சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா  வேலைகள் மந்தமான நிலையில் கிடப்பது விசனத்துக்குரியதே.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கவனிப்பார் அற்றுக்கானப்படும் கல்முனை மாநகர சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா!கல்முனை மாநகர சபை மேயரின் கவனத்திற்கு!! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top