பி.எம்.எம்.ஏ.காதர்;
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பயிர்ச்செய்கை நிலங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் காணப்படும் மண் அணைகளையும் கைவிடப்பட்ட காவலரண்களையும் அகற்றித் தருமாறு மீள்குடியேறியுள்ள மக்கள் பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த பகுதியில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மற்றும் பயிர்ச்செய்கை நிலங்களில் யுத்த காலத்தில் போடப்பட்டிருந்த மண் அணைகள், கைவிடப்பட்ட காவலரண்கள் ஆகியன இன்று வரையும் பல பகுதிகளில் காணப்படுகின்றன.
இவை அகற்றப்படாமையினால் விவசாய நிலங்களில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.

கைவிடப்பட்ட காவலரண்களில் வெடிபொருட்களின் அச்சம் காணப்படுவதால் அவற்றினை அப்பகுதி மக்கள் அகற்ற முடியாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது
குறிப்பாக யுத்தம் நடைபெற்ற காலத்தில் படையினரின் நகர்வைத் தடுக்கும் நோக்கில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தெற்குபக்கமும் மேற்கு பக்கமும் மண் அணைகள் அமைக்கப்பட்டன.
இந்த மண் அணைகள் பொதுமக்களின் விவசாய நிலங்கள் மற்றும் காணிகளை ஊடறுத்துச் செல்வதால் காணிகளை தமது தேவைக்கு பயன்படுத்த முடியாது நிலைகாணப்படுகின்றது.
இந்த மண் அணைகளை அகற்றுவதற்கு பொதுமக்கள் பெரும் தொகை நிதியைச் செலவு செய்ய வேண்டியுள்ளதுடன் மண் அணைகளுக்கு அருகில் வெடிபொருட்களின் அபாயம் காணப்படுவதால் இதனால் குறித்த மண் அணைகளை அகற்றி காணிகளைப் பயன்படுத்த உதவுமாறு பொதுமக்கள் பிரதேச செயலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments:
Post a Comment