கல்முனை லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் மைஹோப் நிறுவனத்தின் அனுசரனையுடன் மருதமுனை 'அல்-ஹிக்மா கனிஷ்ட' புதிய பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றம் கற்றல் உபகரணங்கள் வழங்கிய நிகழ்வு நேற்று மாலை (27-12-2013) ஹாதி நீதிபதியும் பாடசாலை அபிவிருத்திச்;சபையின் தலைவருமான என்.எம். இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிதிகளாக மைஹோப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் லயனஸ் சித்தீக் நதீர், கல்முனை லயன்ஸ்
கழகத்தின் தலைவர் லயன்ஸ் எஸ் ஸ்ரீரங்கன், பறக்கத் டெக்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.ஏ. பரீட், நீதிபதி ரீ.எல். அப்துல் மனாப், ஷம்ஸ் அதிபர் ஏ.ஆர் எம். தௌபீக், கணக்காளர் லயன்ஸ் றிஸ்வி யஹ்சர் மற்றும்; பாடசாலை அபிவிருத்திச்;சபையின் பொருளாளர் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் நியாஸ் எம் அப்பாஸ், செயலாளர் எம்.எல்.மஹ்றூப் ஆசிரியா,; உறுப்பினர்கள் என்.எம்.எம்.இஸ்மாயில், ஜே.எம்.நபார் உள்ளீட்ட ஏனைய உறுப்பினர்கள் பெற்றோர்களும்; கலந்து கொண்டனர். மேலும் மைஹோப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் லயன்ஸ் சித்தீக் நதீர் பாடசாலையின் அபிவிருத்திக்கு 25.000 ரூபாவுக்கான காசோலையை ஹாதி நீதிபதியும் பாடசாலை அபிவிருத்திச்;சபையின் தலைவருமான என்.எம். இஸ்மாயிலிடம் வழங்கினார். அத்தோடு மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ரீ.எல். அப்துல் மனாப் மாணவர்களுக்கு கற்றல் விளையாட்டு உபகரணங்கள் பற்பசை பற்தூரிகை அடங்களான பொதிகளையும் வங்கினார். 55 மாணவர்கள் தரம் ஒண்றுக்கு இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.December 28, 2013
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment