கிரிக்கெட்டில் போட்டியின் முடிவு எந்த நேரத்திலும் மாறலாம் என்ற விதியில்
“டெத் பவுலிங்” எனும் கடைசிக் கட்ட ஓவர்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.
இருபது
ஓவர் ஆட்டத்தில் கடைசி ஓவர்கள் மிகவும் முக்கியம். அதில், சிறப்பாகச்
செயல்படும் பந்து வீச்சாளர்கள் அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு
வகிக்கின்றனர். அந்த வகையில் இலங்கையின் மலிங்கா, தென் ஆப்ரிக்காவின்
ஸ்டெயின், மேற்கிந்தியத் தீவுகளின் நரைன், அவுஸ்திரேலியாவின் ஷான் டெய்ட்
உள்ளிட்ட வீரர்கள் முக்கிய இடம் பிடிக்கின்றனர்.
அத்தகைய திறமையுடன் பந்து வீச்சாளர் திகழ வேண்டுமெனில், விளையாடும்
துடுப்பாட்ட வீரரின் தன்மை குறித்தும் அவரது ஷாட் அடிக்கும் விதம் மற்றும்
பலவீனங்கள் குறித்தும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். அவ்வாறு
அறிந்திருக்கவில்லை என்றால் பந்து வீச்சாளருக்கு சிக்கல்தான் என
மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் பிஷப் தெரிவித்துள்ளார்.
"யார்க்கர் மூலம் துடுப்பாட்ட வீரர்களின் ஓட்டம் சேகரிக்கும் திறனைக்
கட்டுப்படுத்த முடியும். ஆனால், யார்க்கருக்கு முயற்சி செய்து, பந்து 5
இஞ்ச்சுக்கு முன்னதாக பிட்ச் செய்தால், அது சிக்ஸருக்கோ, பவுண்டரிக்கோ
செல்லும்' என அவுஸ்திரேலியாவின் நேன்ஸ் எச்சரித்துள்ளார்.
டி20 போட்டி என்றவுடனே அனைவருக்கும் நினைவுக்கு வருவது சிக்ஸர்களும்,
பவுண்டரிகளும்தான். ஆனால், சமீபத்திய போட்டிகள் அந்தக் கூற்றை மாற்றி
வருகின்றன.
2010-ம் ஆண்டிலிருந்து கடைசிக் கட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய முதல் 5 வீரர்கள்
ஷான் டெய்ட் (அவுஸ்திரேலியா), அசோக் திண்டா (இந்தியா), சுனில் நரைன்
(மே. தீவுகள்), டேல் ஸ்டெயின் (தென் ஆப்ரிக்கா), முகமது அமீர் (பாகிஸ்தான்)
மோசமாக பந்து வீசிய 5 பந்து வீச்சாளர்கள்
டிம் பிரஸ்னென் (இங்கிலாந்து), டெர்ன்பச் (இங்கிலாந்து), கைல் மில்ஸ் (நியூசிலாந்து), வேயன் பிராவோ (மே. தீவுகள்), குலசேகரா (இலங்கை)
0 comments:
Post a Comment