முஸ்லிம்கள் மீது இடம் பெற்றுவரும்
வன்முறைகளை அரசாங்கம் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து
நிறுத்தாவிடின் முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஜெனீவாவுக்கு மீண்டும் கொண்டு செல்லவேண்டிய நிலை ஏற்படும் என ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சமான றஊப் ஹக்கீம் மட்டக்களப்பில்
வைத்து இன்று(18.5.2014)ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மாவனல்லையில் முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்த
ஒருவரின் வர்த்தக நிலையமொன்று ஞாயிற்றுக்கிழமை 18.5.2014 அதிகாலை
எரிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வர்த்தக நிலைய
எரிப்புச்சம்வத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சமான றஊப் ஹக்கீம் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த பிரதேசத்தில்
இடம் பெற்ற வெசாக் ஊர்வலத்தையடுத்து இந்த முஸ்லிம் சகோதரரின் வர்த்தக
நிலையம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அளுத்கம பிரதேசத்தில் முஸ்லிம் சகோதரர்
ஒருவரின் வர்த்தக நிலையம் எரிக்கப்பட்ட சம்பவம் சூடாறுவதற்கிடையில்
மாவனல்லையில் மேலும் ஒரு முஸ்லிம் நபரின் வர்த்தக நிலையம்
எரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எனது வன்மையான கண்டனத்தை
தெரிவிப்பதுடன் சட்டமும் ஒழுங்கும் நிலை நாட்டப்படல்லை என்பதை
இச்சம்பவங்கள் காட்டுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பாரிய
சந்தேகம் ஏற்படுகின்றது. அரசாங்கம் இந்த சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை
எடுக்காமல் அலட்சியப்போக்கை காட்டினால் மீண்டும் முஸ்லிம்களின்
பிரச்சினைகளை ஜெனீவாவுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த சம்பவங்கள் நடப்பதற்கு முன்னரே
இவ்வாறான வன்செயல்களுக்கு தூபமிடப்படுவதை அலட்சியம் செய்யும் போக்கில்
நடந்து கொள்வது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. முஸ்லிம்கள் மீதான
வன்முறைகளை தூண்டும் ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்குபவர்கள் அல்லது அந்த
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணைகளை நடாத்தி சட்ட நடவடிக்கை
எடுக்க தவறி வருகின்றனர்.
தொடர்ச்சியாக திட்டமிட்டு முஸ்லிம்களை
தாக்குவதும் அவர்களின் உடமைகள், வர்த்தக நிலையங்களை தீக்கிரையாக்குவதும்
நாட்டில் பதற்றத்தை உருவாக்குகின்றது. அரசாங்கம் உடனடியாக இது தொடர்பில்
சட்ட நடவடிக்கை எடுத்து இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாத வன்னம் பாதுகாக்க
வேண்டும் மதத்தலைவர்கள் சட்டத்தையும் ஒழுங்கையும் கையிலெடுக்க முடியாது.
அது காட்டுத்தர்பாரையே உருவாக்கும் என அமைச்சர் ஹக்கீம் மேலும்
தெரிவித்தார்.
0 comments:
Post a Comment