சுலைமான் றாபி;
நிந்தவூர் றியல் இம்றான்
விளையாட்டுக் கழகம் நடாத்திய மர்ஹுமா ஆதம்பாவா மைமூனா ஞாபகார்த்த அணிக்கு
08 பேர் கொண்ட 05 ஓவர்கள் மட்டுப் படுத்தப்பட்ட மென்பந்து கிரிகெட்
சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று 18.05.2014 நிந்தவூர் பொது
விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை எஸ்.எஸ்.சி மற்றும் ஒலுவில் லெவன் ஸ்டார்
அணிகள் மோதிய இவ்விறுதிப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற
ஒலுவில் லெவன் ஸ்டார் அணி முதலில் துருப்பெடுத்தாடியது, அந்த வகையில்
ஆரம்பமே அதிரடியாக ஆடிய அந்த அணி 05 பந்து வீச்சு ஓவர்களில் 01 விக்கெட்
இழப்பிற்கு 101 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அந்த அணி சார்பாக றஸ்மி 13
பந்துகளில் 42 ஓட்டங்களையும், மலிக் 07 பந்துகளில் 31 ஓட்டங்களை பெற்றுக்
கொடுத்தார். பந்து வீச்சில் சம்மாந்துறை எஸ்.எஸ்.சி அணி சார்பாக அஜ்வத் 20
ஓட்டங்களுக்கு 01 விகேடினை கைப்பற்றினார். பதிகுக்கு துருப்பெடுத்தாடிய
சம்மாந்துறை எஸ்.எஸ்.சி அணி 05 பந்து வீச்சு ஓவர்களில் 05 விக்கெட்
இழப்பிற்கு 50 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். இதில் அவ்வணி சார்பாக சர்மி
என்ற வீரர் மட்டுமே கூடுதல் ஓட்டமாக 13 பந்துகளில் 21 என்ற ஓட்டத்தினை
பதிவு செய்தார். இந்த இறுதிப்போட்டியில் ஒலுவில் லெவன் ஸ்டார் அணி மேலதிக
52 ஓட்டங்களினால் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
இதேவேளை இன்று இடம்பெற்ற இறுதிப்போட்டிக்கு அதிதிகளாக
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எ.எம் தாஹிர், எதிர்கட்சித்தலைவர்
வை.எல். சுலைமாலெவ்வை, உறுப்பினர் எஸ்.ஏ.எஸ்.எம் றியாஸ், சம்மாந்துறை
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி. டி.ஏ.கே. தஹனக, சட்டத்தரணி ஏ.எல். நசீல்
மற்றும் றியல் இம்றான் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள் அனைவரும்
கலந்து கொண்டனர்.
இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு
இருபதாயிரம் (20,000/=) ரூபாவும்வெற்றிக்கேடயமும், இரண்டாம் நிலையை பெற்ற
அணிக்கு ஐயாயிரம் (5,000/=) ரூபாவும் வெற்றிக்கேடயமும் வழங்கி
வைக்கப்பட்டது. இதேவேளை இந்த கிரிகெட் சுற்றுதொடரில் உள்ளூர் மற்றும்
வெளியூர்களில் இருந்து 60 அணிகள் பற்றியது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment