குற்றச் செயல்கள் சம்பந்தமாக நீதியமைச்சின் கீழ் உள்ள அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் அறிக்கைகள் சமர்ப்பிக்கும் பொழுது அரசியல் அல்லது வேறு தலையீடுகளுக்கு அறவே இடமளிக்கப்படுவதில்லையென நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்
புதிய அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளராக திருமதி. சகுந்தலா தென்னகோன், அமைச்சர் ஹக்கீம் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (20) முற்பகல் பத்தரமுல்லை பெலவத்தையில் அமைந்துள்ள அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் பதவியேற்ற பொழுதே அவர் இதனைக் கூறினார்.
புதிய அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளராக திருமதி. சகுந்தலா தென்னகோன், அமைச்சர் ஹக்கீம் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (20) முற்பகல் பத்தரமுல்லை பெலவத்தையில் அமைந்துள்ள அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் பதவியேற்ற பொழுதே அவர் இதனைக் கூறினார்.
எனக்கு முன் உரையாற்றிய இரசாயன பகுப்பாய்வாளர் திருமதி. சகுந்தலா தென்னகோன் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றிற்கு பதிலளிக்கும் போது இத் திணைக்களத்தில் எந்தவிதமான வெளியார் தலையீடுகளுக்கும் இடமில்லை என்றார். அதனை நான் நீதியமைச்சர் என்ற முறையில் உறுதிப்படுத்துகிறேன்.
தங்கல்லையில் பிரதேச சபை தலைவரான சந்தேக நபர் வெளிநாட்டார் ஒருவரை படுகொலை செய்து, அவரது காதலியை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடையவர்களின் மரபணு சான்றுகளின் அறிக்கையை எந்தவிதமான பாரபட்சமுமின்றி அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் சமர்ப்பித்தது எந்தவிதமான தலையீடுகளுக்கும் இதில் இடமில்லை என்பதற்கு இதற்குச் சான்றாகும். அந்த அறிக்கை சுயாதீனமானதாக தயாரிக்கப்பட்டிருந்தது.
நீதியை நிலைநாட்டும் விடயத்தில் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் முக்கிய பங்கை ஆற்றுகின்றது. சகல வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் இதன் செயல் திநன் மிகவும் அதிகரித்துள்ளது. மரபணு தொழிநுட்ப ஆய்வு கூடம் பல பாரதூரமான குற்றச்செயல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர பெரிதும் உதவுகின்றது. மரபணு பரிசோதனையின் மூலம் 2000 திற்கும் அதிகமான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்.
கொழும்பில் நீதிபதி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், ஹோகந்தர படுகொலை சம்பவம் உட்பட பல்வேறு பாரதூரமான குற்றச் செயல்களில் மரபணு சாட்சியங்கள் குற்றவாளிகளை சரிவர இனங்காண்பதற்கு உதவியுள்ளன.
போதைப்பொருள் சம்பந்தமான வழக்குகளில் சந்தேக நபர்களை சரிவர அடையாளம் காண்பதற்கும் இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் உதவி வருகின்றது. போதைப்பொருள் தொடர்பாக இன்று கூட பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருகிறார்கள். போதைப்பொருள் குற்றம் சம்பந்தமாக 2012 ஆம் ஆண்டில் 47 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறே 2011 ஆம் ஆண்டில் 42 ஆயிரம் பேரும் 2010 ஆம் ஆண்டில் 29 ஆயிரம் பேரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஹெரோயினுக்கு மேலதிகமாக கஞ்சா, அபின், ஹஷீஷ் ஆகிய போதைப்பொருள்கள் விடயத்திலும் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்குகளைத் தொடுப்பதற்கு அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பங்களிப்பு இன்றியமையாததாக இருந்தது.
கணினிகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் பாரதூரமான குற்றச்செயல்களை கண்டறிவதற்கு புதிதாக இத் திணைக்களத்தில் ஓர் ஆய்வு கூடம் நிறுவப்படவுள்ளது என்றார்.
இலங்கை வரலாற்றில் 19ஆவது அரசாங்க இரசாயன பகுப்பாளராக பதவியேற்ற திருமதி சகுந்தலா தென்னகோனும் உரையாற்றினார். அவர் இலங்கையின் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளராக பதவியேற்ற இரண்டாவது பெண்மணி ஆவார்.
இந் நிகழ்வில் நீதியமைச்சின் மேலதிகச் செயலாளர் திருமதி. லக்ஷ்மி குணசேகர, சிரேஷ்ட உதவிச் செயலாளர் சமன் குமாரி, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் மற்றும் இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment