சட்டத்தின் ஆட்சியை அமுல் படுத்தி குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு (The Organization of Islamic Cooperation OIC) அரசாங்கத்தை கோரியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதிய சூழ்நிலை தொடர்பில் ஆழ்ந்த கவலையை அது வெளியிட்டுள்ளது . சிறுபான்மை சமூகங்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தி சகல இலங்கை மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக நாடுகளின் பிரதான கூட்டமைபான ஐநா
இலங்கையின் மத சிறுபான்மை விடயத்தில் தனது உச்ச கவனத்தை செலுத்தியிருந்தது .
உலகில் ஐநாவுக்கு அடுத்து பெரிய அமைப்பாக கருதப்படும் 57 முஸ்லிம்
நாடுகளை ஒன்றிணைத்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (இஸ்லாமிய மாநாட்டு
அமைப்பு-OIC) இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் இரண்டாவது முறையாக தனது
கரிசனையை வெளியிட்டுள்ளது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஐநா மனித உரிமைகள்
அவையில் இலங்கை அரசாங்கத்துக்கு மிகப் பெரிய உதவிகளை வழங்கிய அமைப்பாகும்.
உள்நாட்டில் சட்டத்தின் ஆட்சி
எல்லோருக்கும் கிடைக்க முடியாத நிலையில் முஸ்லிம்களும் அதில் உள்வாங்கப்
பட்டுள்ள நிலையே தொடர்கிறது .முஸ்லிம்களுக்கும்எதிரான வெறுப்பு பிரசாரம்
எந்த தடையும் இன்றி செயல்படுத்தப் பட்டு வருவதை முஸ்லிம்கள் கண்டு
வருகிறார்கள் .
57 முஸ்லிம் நாடுகளை ஒன்றிணைத்த இஸ்லாமிய
ஒத்துழைப்பு அமைப்புஇலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் இரண்டாவது முறையாக தனது
கரிசனையை வெளியிட்டுள்ளமை முக்கியத்துவம் கொண்டதாக பார்க்கப்படுகிறது
எனினும் நாட்டில் உள்ள ஆளும் தரப்பு முஸ்லிம் அரசியல்வாதிகள் , கட்சிகள்
உண்மையான தகவல்களை இந்த அமைப்புக்கு வழங்கினால் மட்டுமே அதன் நடவடிக்கைகள்
அர்த்தபுஷ்டியான அமையும் என்பதில் சந்தேகமில்லை .
முஸ்லிம் அமைச்சர்களும் , பாராளுமன்ற
உறுப்பினர்களும் தமது வாசிக்கு ஏற்றாபோல் தகவல்களை வித்தியாசப் படுத்தி
கூறி வருவார்களானால் கடந்த ஆண்டு அறிக்கை போன்று செயலற்றதாகவே இந்த
அறிக்கையின் செயல்திறனும் மாறிவிடும் .
நாட்டில் பள்ளிகள் உடைக்கப்பட்டு
முஸ்லிம்கள் சமூகம் சமூக ஒடுக்கு முறையை எதிர்கொள்ளும்போது சட்டத்தை
நடைமுறைப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்து வன்முறைக்கும் , இன,மதவாத
ரீதியில் வெறுப்பை தூண்டும் பிரசாரத்துக்கு முற்றுபுள்ளி வைக்க தவரிவரும்
அரசை பாதுக்காக்கும் நடவடிகையையே செய்து வந்துள்ளார்கள் .
முஸ்லிம் நாடுகளுக்கு சொல்லும் அல்லது
அனுப்பபடும் சில அமைச்சர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்கு முறை என்பது
மிகைப்படுத்தப் பட்டுள்ள பொய் பரப்புரை என கூறி அமைப்புக்கள்
விடுக்கும் அறிக்கைகளை அறிகையுடம் மட்டும் முடக்கிவிடுகிறார்கள் என்பது
நினைவூட்டத்தக்கது .
கடந்த 2013 ஆண்டு மார்ச் மாதம் இலங்கை
அரசுக்கு இஸ்லாமிய மாநாட்டு அமைப்பால் உத்தியோகபூர்வமாக அனுப்பட்ப்பட்ட
கடிதத்தில் இலங்கையில் அதிகரித்துவரும் இன பதற்றம் தொடர்பான குறிப்பாக
மத்திய மாகாணத்தில் அதிகரித்துவரும் இன பதற்றம்தொடர்பான முறைபாடுகள்
தொடர்பில் தனது கவலை தெரிவித்திருந்தது .
அதன் பின்னர் நாட்டில் ஆளும் தரப்பில்
இருக்கும் அரசியல்வாதிகள் முஸ்லிம் நாடுகளை வேறு விதமாக கையாள முயன்று
வந்துள்ளனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது .
சட்டத்தின் ஆட்சி எப்படிபோனாலும் சரி எமது
அமைச்சு பதவி பாதுகாக்கப் படவேண்டும் அதற்கான எந்த உண்மையையும் மறைக்கவும்
தேவையான போது முஸ்லிம் சமூகத்தை காட்டிகொடுக்கவும் துணியும் சில
முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயல்பாடுகள்தான் இன்று அளுத்கமயிலும்
பேருவலையிலும் முஸ்லிம் சமூகம் சுமந்து கொண்டுள்ளது என்பதும் நினைவுபடுத்
தக்கது .
முஸ்லிம் அரசியல் ஆளும் தரப்பு
அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வந்த நடவடிக்கைகளை உரிய
முறையில் திடமாக நின்று அரசுக்கு விளங்கும் மொழியில் அழுத்தம் கொடுக்கும்
அணுகுமுறையை உள்ளும் புறம்பும் கையாண்டிருந்தால் அரசாங்கத்தை சட்டத்தின்
ஆட்சியை நாட்டின் மக்கள் அனைவருக்காகவும் செயல்படுத்த தூண்டி இருக்க
முடியும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை அதற்கு துணிவு பெறவில்லை ,மாறாக
ஏமாற்று அரசியலையே கைகொண்டு செல்பட்டு வந்துள்ளார்கள், சமூகத்தின் நலன்
என்பதை விடவும் தாம் சார்ந்த கட்சியின் இலாபம் என்பதைத்தான் இவர்கள்
முதன்மைப் படுத்தி செயல்பட்டுவருகின்றனர் . அதன் தவிர்க்க முடியாத
விளைவைத்தான் இன்று முஸ்லிம் சமூகம் சந்தித்து வருகிறது -
இப்போது வேடிக்கையான விடயம் என்னவென்றால்
குற்றவாளிகளை அரசாங்கம் ஏன் கைது செய்யவில்லை என்பதை அரசாங்கமே
கேட்டுகொள்கிறது . முஸ்லிம் மக்கள் கேட்க வேண்டிய கேள்விகளை முந்திக்கொண்டு
முஸ்லிம் ஆளும் தரப்பு அரசியல்வாதிகளே அறிக்கைகள் மூலம் கேட்டு
விடுகிறார்கள் அரசாங்கத்துக்கு விளங்கும் வகையில் எந்தவகையான
அழுத்தங்களையும் கொடுக்க துணிவற்ற இவர்கள் அறிகைகள மூலமாக முஸ்லிம்
சமூகத்தை ஏமாற்றி வருகிறார்கள் என்பதுதான் உண்மை.
ஆளும்தரப்பு முஸ்லிம் அரசியல்வாதிகளே
உங்களால் உள்ளிருந்து முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்க முடியவில்லை என்பது
தெளிவாக வெளிப்பட்டுள்ளது . இனி வெளியில் வந்து பாதுகாக்க போராடுங்கள்-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் போராட்டம் உ ங்களுக்கு ஒரு சிந்த உதாரணம் என
முஸ்லிம் சமூகம் முனுமுனுப்பது காதுக்களுக்கு எட்டுகிறது.
0 comments:
Post a Comment