• Latest News

    June 18, 2014

    சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

    மதங்களால் சிறுபான்மையினராக வாழும் மக்களின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. அண்மையில் அளுத்கமை மற்றும் பேருவளை பகுதியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர்.

    பொதுபலசேனாவின் பேரணி ஒன்றை அடுத்தே இந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. இந்தநிலையில் இது அண்மைக்காலப் பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற பாரிய இனக்குரோத நடவடிக்கையாகும் என்று மன்னிப்புசபை கூறியுள்ளது.

    எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் சபை கேட்டுள்ளது. பொலிஸார் ஊரடங்கு சட்டத்தை அமுல்செய்திருந்த வேளையிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றமையை சபை சுட்டிக்காட்டியுள்ளது.

    சமூக தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தபோதும் பொதுபலசேனாவின் பேரணியை நடத்த அனுமதித்தமையானது அதிகாரிகளின் தவறு என்றும் சர்வதேச மன்னிப்புசபை குற்றம் சுமத்தியுள்ளது-TC
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top