• Latest News

    June 18, 2014

    ஹர்த்தால் காரணமாக கல்முனை மாநகர சபை இயங்கவில்லை

    ஹர்த்தால் காரணமாக இன்று (18) கல்முனை மாநகர சபை இயங்கவில்லை. ஆனால் அது இயங்குவதாக வெளிவந்துள்ள தகவல் பொய் பிரச்சாரமாகும் என கல்முனை மேயர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ள வேளையில் கல்முனை மாநகர சபை நிகழ்வொன்று இன்று மாநகர சபைக்குச் சொந்தமான சாய்ந்தமருது ஹெல்த் கெயார் சென்றரில் இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது.

    மாநகர சபை ஊழியர்களில் பலர் தமது கடமைகளை இன்று மாநகர சபைக்குச் சொந்தமான சாய்ந்தமருது ஹெல்த் கெயார் சென்றரில் நிறைவேற்றுவதை அறிய முடிகிறது.

    அதேவேளை மாநகர சபையில் ஒப்பமிட்டபின்னர் சில ஊழியர்களும் உத்தியோகத்தர்களும் மாநகர சபைக்குள் இருந்து கொண்டு அரட்டையடிக்கின்றமையை தற்பொழுதும் காணக்கூடியதாக இருக்கின்றது.

    மேற்படி நிகழ்வில் கல்முனை முதல்வரும்இ கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்இ மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளார்களா?

    அளுத்கமையில் இனவாதிகளின் முஸ்லிம்கள் மீதான கொடூர தாக்குதலை கண்டித்து கல்முனையில் பாரிய ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு துஆப் பிராத்தனையும் நடைபெறும் இவ்வேளையில் முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரத்திலுள்ள கல்முனை மாநகர சபையில் மாத்திரம் ஏன் இவ்வாறு இடம்பெறுகின்றது என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹர்த்தால் காரணமாக கல்முனை மாநகர சபை இயங்கவில்லை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top