
கடத்தப்பட்ட
குருநாகல், அம்ப கொலவெவ பகுதி சிறுமி குறித்து தகவல் தருபவருக்கு 10
இலட்சம் ரூபா அன்பளிப்பு வழங்குவதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
சிறுமி குறித்த தகவல் இடைப்பவர்கள் 011-422 176, 011 3024 245
அல்லது 0777223095 எனும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கோரியுள்ளார்.
தமது பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 4
வயதான தமாரா ஹோசாலி எனும் சிறுமி கடந்த 9ம் திகதி அதிகாலை
கடத்தப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் சி.ஐ.டி. அடங்கலாக 6 விசாரணை
குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பலரிடம் வாக்குமூலம்
பெறப்பட்டுள்ளதோடு இவர்களின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற மாந்திரிகர்
(கபுரால) கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
சம்பவம் தொடர்பில் இதுவரை முன்னேற்றகரமான எதுவித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.-TK