அரசாங்கம் மக்கள் மீது உளவியல் ரீதியான அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உளவியல் ரீதியான ஆய்வுகளின் பின்னர், அரசாங்கம் இவ்வாறு மக்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.
டிபென்டர் ரக வாகனங்கள் மற்றும் குண்டர்களை பயன்படுத்தி ஊவாவில் பதற்ற நிலைமையை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.கட்சித் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உளவியல் ரீதியான ஆய்வுகளின் பின்னர், அரசாங்கம் இவ்வாறு மக்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.
மக்களை பீதிக்குள்ளாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.
மக்கள் வாக்குச் சாவடிகளுக்கு சென்று சுயாதீனமாக வாக்களிப்பதனை தடுத்து நிறுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
அரசாங்கத்தின் இந்த அடக்குமுறைகளை முறியடிப்பது மக்களின் கடமையாகும்.
ஊவா மாகாணத்தில் அரசாங்கம் பிரயோகித்து வரும் அடக்குமுறைகளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் பயன்படுத்திக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment