
ஏற்கனவே தாம் சஜித் பிரேமதாஸவை பற்றி கூறிய கருத்துக்களில் மாற்றங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான ஐக்கிய தேசியக் கட்சியினரின் கருத்துக்களையே தாம் வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாஸ தமது பணிகளை காட்டவேண்டும் என்று கூறியது சவால் அல்ல. அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது கட்சியின் தலைவரது வெற்றியை உறுதி செய்வதற்கான பணிகளை சஜித் முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவே தாம் அவ்வாறு கூறியதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சஜித் பிரேதமாஸ, கட்சியின் ஒற்றுமை, எதிர்ப்பார்ப்பு என்பவற்றை இட்டுசெல்லும் வகையில் செயற்பட வேண்டும் என்று மங்கள குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமது கட்சிக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தி எதிரியை பலப்படுத்த தாம் விரும்பவில்லை என்றும் மங்கல தெரிவித்துள்ளார்.
இளைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்து ஊவா மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் சிறந்த உதாரணத்தை காட்டியுள்ளார் என்றும் மங்கள சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment