
மொனராகலையில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாகிய பின்புதான் முஸ்லிம் மக்கள் உரிமையுடன் வாழ்கின்றனர்.
மேலும் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றனர். அனைத்து முஸ்லிம் நாடுகளும் இலங்கைக்கு ஆதரவு வழங்குகின்றன.
அமெரிக்கா. பிரிட்டன். நோர்வே என்று எந்த வல்லரசுகள் எதிர்த்தாலும் முஸ்லிம் தலைவர்கள் இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களிக்கின்றார்கள்.
இலங்கையில் முஸ்லிம்கள் ஏனைய நாடுகளை விட சிறப்பாக வாழ்கின்றார்கள் என்பது உலக முஸ்லிம் தலைவர்களுக்குத் தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இங்கு பள்ளிவாசல்கள் கட்டப்படுவதினால் முஸ்லிம்களுக்கு கிடைக்கும் நன்மைகளையும் எவரும் மறைக்க முடியாது அவை செய்மதி மூலம் முழு உலகிற்கும் செல்கிறது.
இதனை மனதிற்கொண்டு முஸ்லிம் மக்கள் இந்த அரசாங்கத்தைக் காப்பாற்ற வேண்டும். போஷிக்க வேண்டும். ஆதரவு வழங்க வேண்டும். சிறு சிறு சம்பவங்கள் நடக்கலாம். எனினும் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அஸ்வர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment