சாட்சியாளர்கள்
மற்றும் குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கு தேசிய
அதிகாரசபை ஒன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேசிய அதிகார சபை
மற்றும் விசேட பொலிஸ் பிரிவு ஆகியவற்றின் ஊடாக சாட்சியாளர்களையும்,சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்ளையும் பாதுகாக்கும் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.
சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டமூலம் நேற்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின்
தலைமையிலான பிரிவினர் சாட்சியாளர்ளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும்
பாதுகாப்பு வழங்குவர். சாட்சியாளர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக
பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள், பழிவாங்கல் நடவடிக்கைகள்
தொடர்பில் இந்த விசேட பொலிஸ் குழு விசாரணை நடத்தும் என உத்தேச சட்டத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தேச சட்டமூலம், அமைச்சர் ரவூப் ஹக்கீமினால்
நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment