• Latest News

    September 09, 2014

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வஸிம் அக்ரம் மீண்டும் குழந்தையொன்றுக்கு தந்தையாகின்றார்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வஸிம் அக்ரம் மீண்டும் குழந்தையொன்றுக்கு தந்தையாகவுள்ளார். தனது மனைவி ஷெனேரியா தற்போது கர்ப்பமாக உள்ளாரென வஸிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
     
    48 வயதான வஸிம் அக்ரம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷெனேரியா தொம்ஸ்னை திருமணம் செய்திருந்தார். இத்தம்பதிகள் தற்போது தமது முதல் குழந்தையை எதிர்பார்த்துள்ளனர்.
     
    1995 ஆம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த ஹுமாவை வஸிம் அக்ரம் திருமணம் செய்திருந்தார். இத்தம்பதிகளுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

    உடல் அங்கங்கள் செயலிழந்த நிலையில் சென்னையிலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்ட ஹுமா அக்ரம் 2009 ஆம் ஆண்டு காலமானார்.
     
    பின்னர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷெனேரியா தொம்ஸனை வஸிம் அக்ரம் காதலிக்கத் தொங்கினார். 2013 ஆம் ஆண்டு மெர்பேர்னில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  கடந்த வருடம் லாகூர் நகரில் இவர்கள் திருமணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

    மீண்டும் தான் தந்தையாகுவது குறித்து அறிவித்துள்ள வஸிம் அக்ரம், தனது மகன்கள் மற்றும் குடும்பத்தினர். நண்பர்களும் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் அடுத்த வருடம் தனது மனைவி இக்குழந்தையை பெறுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும்  தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வஸிம் அக்ரம் மீண்டும் குழந்தையொன்றுக்கு தந்தையாகின்றார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top