எஸ்.அஷ்ரப்கான் :
டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம் மற்றும் ஜனாதிபதியின் டெங்கு ஒழிப்புச் செயலனியின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நாவிதன்வெளிக் கோட்டப் பாடசாலைகளில் பொது சுகாதார பரிசோதகர் எம்.இளங்கோவன் தலைமையில்; டெங்கு ஒழிப்பு பரிசோதனை நடவடிக்கைகள் நேற்று (12) ஆரம்பமாகியுள்ளது.
நாவிதன்வெளி பொது சுகாதார பணிமனைப் பிரதேசத்திற்குள் அடங்கும் மத்தியமுகாம் சவளக்கடை ஆகிய பொலிஸ் நிலையங்களின் உத்தியோகத்தர்களுடன் பாடசாலைகளின் சுற்றுப்புறச் சூழலில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளப்படுத்தி அவற்றை அழித்தொழிக்க நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 14 நாட்களுக்கு முன் சகல பாடசாலைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இவ்வறிவுறுத்தல்களுக்கு அமைவாக பொலிஸ் பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இவ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருக்கத்திற்கு துணையாக உள்ள இடங்களில் டெங்கு நுளம்பு முட்டைகள் மற்றும் நீர் தேங்கி இடங்களைக் கண்டால் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இச் செயற்திட்டத்தின் அடுத்தகட்டமாக வீடுவீடாக டெங்குப் பரிசோதனை நடவடிக்கைகள் தொடரும் எனவும் நாவிதன்வெளி பொது சுகாதார அதிகாரி எம். இளங்கோவன் தெரிவித்தார்.நாவிதன்வெளி பொது சுகாதார பணிமனைப் பிரதேசத்திற்குள் அடங்கும் மத்தியமுகாம் சவளக்கடை ஆகிய பொலிஸ் நிலையங்களின் உத்தியோகத்தர்களுடன் பாடசாலைகளின் சுற்றுப்புறச் சூழலில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளப்படுத்தி அவற்றை அழித்தொழிக்க நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 14 நாட்களுக்கு முன் சகல பாடசாலைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment