ஹப்புத்தளை
- ஹல்துமுல்ல - மீறியபெந்த தோட்ட பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவு
காரணமாக இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய
நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
மண்ணுக்குள் புதையுண்டு சுமார் 250 பேர் வரை ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.
மீட்புப் பணிகள் மேற்கொள்ள ஹெலிக்கொப்டர் ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்
பொலிஸார் இராணுவத்தினர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும்
அவர் கூறினார்.
மண்ணுக்குள் புதையுண்டு சுமார் 250 பேர் வரை ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.
மண்சரிவினால் மீறியபெந்த தோட்டம் சேறு நிரம்பிக் காணப்படுவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பிரதீப் கொடிப்பிலி அத தெரணவிடம் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment