ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு நிறைவேற்று குழு இன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.
இந்தக்குழு யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யும் என இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கைக்கு ஏற்ப, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அனுமதி கேட்டிருந்தது. இதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கமும் வழங்கியுள்ளது.
இந்தக்குழு, பயங்கரவாதம் இராணுவத்தினாலும் நீதியினாலும் மாத்திரம் அடக்கப்படமுடியாதது. தீர்க்கமான கலந்துரையாடல்களும் அதற்கு அவசியமானவை என்று வலியுறுத்தியுள்ளது.இந்தக்குழு யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யும் என இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கைக்கு ஏற்ப, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அனுமதி கேட்டிருந்தது. இதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கமும் வழங்கியுள்ளது.
இந்தக்குழுவுக்கு ஐக்கிய நாடுகளின் சபையின் உதவி செயலாளர் நாயகம் ஜீன் போல் லாபோர்டெ தலைமை தாங்குகிறார். குழுவில் பயங்கரவாத தடு;ப்பு தொடர்பான பல நிபுணர்கள் உள்ளடங்கியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 1624வது யோசனையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த குழுவின் விஜயம் அமைக்கிறது.

0 comments:
Post a Comment