• Latest News

    October 28, 2014

    சதிகாரர்களுக் கெல்லாம் சதிகாரன் இறைவன்: ரிசாத்

    சர்ஜூன் ஜமால்தீன் : முஸ்லிம் தேசியத் தலைமை ஒன்று வடக்கிலிருந்து பரினமிப்பதற்கு பிரபாகரனும் மதவாதிகளும் இனவாதிகளும் அன்று முதல் செய்து வரும் சதியை – அவர்களின் வலையில் சிக்கிக் கொண்ட ஒரு குழு இன்று பிரதேசவாதம் என்ற போர்வையில் அச்சதியை அரங்கேற்ற முனைவதாக கடும் தொனியில் எச்சரித்துள்ளார் அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன்.

    சதிகாரர்களுக்கெல்லாம் சதிகாரன் இறைவன் என்பதை அச்சதிகாரர்களுக்கு ஞாபகம் ஊட்டும் அதே நேரம் இச்சதியை முறியடித்து – வடக்கு முஸ்லிம்களை பாதுகாக்க , அவர்களின் இருப்பை உறுத்திப்படுத்த, அனைவரும் ஒன்றுபடுவோம் என்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அறைகூவல் விடுத்துள்ளார்.

    மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வேப்பங்குளம் மற்றும் வவுனியா – சூடுவெந்தபுளவு ஆகிய பிரதேசங்களில் தையல் பயிற்சி நிலையங்களை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர்  மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

    அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், வடக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசம் என்ற ரீதியில் முசலியை எனது இதயமாகவே பார்க்கின்றேன்.புத்தளம் – மன்னார் வீதியை திறக்க இனவாதிகள் சதி செய்த போது, அதனை முறியடித்து அந்த வீதியை திறந்து வைத்தேன் . இந்திய வீடமைப்புத் திட்டம் வந்த போது அந்த திட்டத்தை மன்னாரில் எங்கு கொண்டு செல்வது என்று இந்திய தூதரகம் யோசித்துக்கொண்டிருந்த போது முசலிக்குத் தான் அதனை வழங்க வேண்டும் என்று விடாப்பிடியாக நின்று அதனை செய்து காட்டினேன்மீனவர் துறைமுகம் அமைக்க அராசாங்கம் திட்டமிட்ட போது சிலாபத்துறைக்கு அந்த துறைமுகத்தை பெற்றெடுப்பதற்கு சிபாரிசு செய்து கொடுத்தவன் நான.; அரசியல் ரீதியாகவும் பலமொன்றை இந்த மண்ணுக்கு பெற்றுக் கொடுத்தவனும் நான்தான்.

    இப்படியாக எத்தனையோ அபிவிருத்திகளை இன்று கண்டுள்ளது முசலி பிரதேசம். இங்குள்ள ஒவ்வொரு கல்லும் அதற்கு சாட்சியாக உள்ளன. ஆனால் இதனை மறைக்க ,இந்த மண்ணிலிருந்து என்னை தூரப்படுத்த     இப்போது ஒரு சிறு குழுவால் சதி நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

    நேற்று முளைத்த காளான்களான அந்தக் குழு என்னையும் முசலியையும் பிரிக்க எடுக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை. மரணம் ஒன்று மட்டுமே என்னையும் முசலி மண்ணையும் பிரிக்க  முடியும். அந்த மரணம் கூட முசலிப் பள்ளி ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இடம்பெற வேண்டும் என்பதே எனது பிரார்த்தனையும் ஆகும்.

    பிரபாகரனும் மதவாதிகளும் இனவாதிகளும் அன்று செய்த சதியை – அவர்களின் வழியை பின்பற்றும் அந்தச் சதிக் கும்பல் வழங்கும் அற்பசொற்ப சலுகைகளை பெற்றுக்கொண்டு இந்தச் சிறு குழு இந்த மண்ணலிருக்கும் முஸ்லிம் தேசியத் தலைமையை அழிக்க சதிகளை உருவாக்கி வருகின்றது. இந்தச் சதியை முளையிலேயே கிள்ளி எறிவதற்குள்ள ஒரே ஒரு வழி எமது ஒற்றுமை தான்நாம் பிரிந்து நிற்பதால் பலவீனம் அ;டைவது நமது சமுகமும் பிரதேசமும் தான் என்ற எதார்த்தத்தை நாம் உணர வேண்டும். வீடுகளை கொடுத்தால் எனது கொடும்பாவிகளை எரிக்கின்றனர். நான் மக்களுக்கு செய்யும் உதவிகளை தடுக்க இனவாதம் பூசுகின்றனர்.

    வடக்கு முஸ்லிம் சமுகம் இந்த விடயத்தில் இன்னும் பாராமுகமாக இருக்கின்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும். அந்தச் சதிக்கும்பல்களுடன் இணைந்திருக்கும் எமது சமுகத் துரோகிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட இனியும் வன்னி முஸ்லிம் சமுகம் பின்னிற்க கூடாது.எனது அரசியல் காலத்தை நன்கு பயன்படுத்தி உங்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள தயாராகுங்கள்.

    நான் அரசியல் ரீதியில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சமுகத்திற்கும் பிரதேசத்திற்கும் நலன் மிக்க முடிவாகவே அமையும். இதற்கு ஒத்துழைப்பை தந்தால் நிச்சயம் நாம் அனைவரும் வெற்றி பெறலாம்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சதிகாரர்களுக் கெல்லாம் சதிகாரன் இறைவன்: ரிசாத் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top