• Latest News

    November 18, 2015

    மைத்திரியின் பதவிக்காலம் வரை நிறைவேற்று அதிகாரம் தொடரும்! மங்கள சமரவீர

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலத்திற்கு பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை முற்றாக ஒழிக்கப்பட்டு விடும் என வெளி்விவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
     
    ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

    நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது மற்றும் தேர்தல் முறையில் மாற்றம் செய்யும் செயற்பாடுகளுக்கு பிரதமர் தலைமையில் குழு ஒன்றை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

    குழுவிற்கான உறுப்பினர்களின் பெயர்களை வழங்குமாறு ஜனாதிபதி பிரதமரிடம் அறிவித்துள்ளார்.

    நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை 6 மாதங்களுக்குள் ஒழிப்பது என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

    தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்திற்கு பின்னர், அது நடைமுறைக்கு வரும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மைத்திரியின் பதவிக்காலம் வரை நிறைவேற்று அதிகாரம் தொடரும்! மங்கள சமரவீர Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top