19 வது அரசியலமைப்பு திருத்தத்தின்கீழ் சபாநாயகர் 8 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தலைவர்களையும் உறுப்பினர்களையும் நியமித்துள்ளார்.
இதன்படி, லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு, பொதுச்சேவைகள் ஆணைக்குழு, மனித
உரிமைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு, தேசிய
எல்லை வரம்பு ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, தேசிய கொள்முதல் ஆணைக்குழு
என்பனவே அவையாகும்.
இதன்படி லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவுக்கு முன்னாள் நீதிபதி டைட்டஸ் புதிபால வீரசூரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் நீதிபதி லால் ரஞ்சித் சில்வா, சந்திராநந்த் நெவல் குருகே ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு தர்மசேன தஸநாயக்க தலைவராக
நியமிக்கப்பட்டுள்ளார். இதன் உறுப்பினர்களாக அப்துல் சலாம், விஜயலட்சுமி
ஜெகராஜசிங்கம், பிரதாப் ராமானுஜம் உட்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கலாநிதி தீபிகா உடகம தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹமீட் கஸ்சாலி ஹுசைன், அம்பிகா சற்குருநாதன் உட்பட்டவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பேராசிரியர் சிறி ஹெடிகே தலைவராக
நியமிக்கப்பட்டுள்ளார். இதில் வை.எல்.எம் சவாஹிர், அன்டன் ஜெகநாதன்
உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்
நளின் ஜெயந்த அபேசேகர மற்றும் எஸ்.ராஜன்ண. எச். ஹுல் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய எல்லைகள் ஆணைக்குழுவுக்கு பவளகாந்தன் கனகரட்னம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சாஹுல் ஹமீட் ஹிஸ்புல்லாஹ் உட்பட்டவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிதி ஆணைக்குழுவுக்கு உதித்த ஹரிலால் பலியக்கார தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலுப்பிள்ளை கனகசபாபதி, எம்.சஹ்புல்லாஹ் , மத்திய வங்கியின் ஆளுநர்
அர்ஜூன மஹேந்திரன் போன்றோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் தலைவராக அந்தனி எம் பொன்சேக
நியமிக்கப்பட்டுள்ளார். நியன் வஹுதிவன், ஆர் சி. வதிக்கார் உள்ளிட்டோர்
உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் 8 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் உறுப்பினர்கள்
நியமிக்கப்பட்ட 2004ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆணைக்குழுக்கள் இயங்கவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment