• Latest News

    November 17, 2015

    சுவிஸ் புங்குடுதீவு மைந்தர்களின், புங். பாடசாலைக்கான உதவிகள்..!! (படங்கள் இணைப்பு)

    யா/புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சமையலறை உபகரணங்கள் இன்று (17.11.2015) புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் பொருளாளரும், புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகத்தின் பிரதம போஷகருமாகிய திருமதி சுலோசனாம்பிகை தனபாலன் அவர்களினால் பாடசாலை அதிபர் திருமதி சத்தியபாமா தர்மேந்திரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது்.

    இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள்,பெற்றோர், நலன்விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. பாடசாலை சமூகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமுகமாகவும்,  பாடசாலை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை  ஊக்குவிக்குமுகமாகவும் இவ் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

    இதேபோல் புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தில் அமைந்துள்ள யா/புங்குடுதீவு துரைச்சாமி வித்தியாலய பாடசாலை திருத்த வேலைக்காக (பாடசாலை கூரை, முகட்டோடு மாற்றுதல், மின்சார உபகரணங்கள் மாற்றுதல் & திருத்த வேலைகள் மற்றும் ஹரிதாஸ் நிறுவனத்தால் அமைத்துக் கொடுத்த மழைநீர் தொட்டியின் திருத்த வேலைகள் போன்றவைக்கு) சிறியதோர் நிதிப் பங்களிப்புச் செய்யப்பட்டது.

    இதனை பாடசாலையின் அதிபர் திருமதி ம.மகாராணி அவர்கள் புங்குடுதீவு  மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் பொருளாளரும், புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகத்தின் பிரதம போஷகருமாகிய திருமதி சுலோசனாம்பிகை தனபாலன் அவர்களிடம் பெற்றுக் கொண்டார் பாடசாலை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை  ஊக்குவிக்குமுகமாக இங் உதவிகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    **மேற்படி அனைத்து விடயங்களுக்குமான செலவுக்குரிய நிதிப் பொறுப்பை தமது பெற்றோர்களின் நினைவாக "சுவிசில் உள்ள புங்குடுதீவு மைந்தர்களில்" சிலர் பொறுப்பேற்று இருந்தனர்.

    அதாவது, புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர்கள் அருணாசலம், சின்னப்பிள்ளை அவர்களின் நினைவாக அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த சுவிஸ் பேர்ன் ரூபேநக்ட் என்னுமிடத்தில் உள்ள திரு.திருமதி. கைலாசநாதன் (குழந்தை) வாசுகி குடும்பம், புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர்கள் வேலுப்பிள்ளை (முன்னாள் சர்வோதய ஊழியர்), இராசம்மா அவர்களின் நினைவாக அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த சுவிஸ் ஒபெர்புர்க் என்னுமிடத்தில் உள்ள திரு.திருமதி. குமார் தர்சினி குடும்பம், புங்குடுதீவு இறுப்பிட்டியை சேர்ந்த அமரர்கள் பாலசிங்கம், நாகம்மா அவர்களின் நினைவாக அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த சுவிஸ் கீர்பெர்க் என்னுமிடத்தில் உள்ள திரு.திருமதி. தயாபரன் வசந்தி குடும்பம், ஆகியோர் பொறுப்பேற்று செய்து இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கும், இவர்களின் குடும்பத்தினருக்கும் எமது நன்றி. 

    அதேபோல், மேற்படி நிகழ்வுகளை சுவிஸ் வாழ் புங்குடுதீவு உறவுகளின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு செய்ய, என்னுடன் இணைந்து செயலாற்றிய "புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகத்தின்" செயலாளர் ஓங்காரநாதன் ஜெகதாஸ் அவர்களுக்கும், "புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகத்தின்" ஆலோசனை சபை உறுப்பினர்களில் ஒருவரான செல்வி. ஜெகநந்தினி முத்துக்குமாரு அவர்களுக்கும், மற்றும் அனைவருக்கும் எமது நன்றி.. 


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சுவிஸ் புங்குடுதீவு மைந்தர்களின், புங். பாடசாலைக்கான உதவிகள்..!! (படங்கள் இணைப்பு) Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top