• Latest News

    November 17, 2015

    சில்லறைத்தனமாக அரசியல் செய்வோருக்கு அஞ்சமாட்டேன்: கிழக்கு மாகாண முதலமைச்சர் சூளுரை

    கிழக்கு மாகாணத்தில் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை கூடுகிறது ஆனால் மக்களின் தேவைகளை நிறைவேற்றலோ மங்கிப்போயுள்ளது. என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.

    அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்:

    மக்கள் ஆதரவளிக்காவிட்டாலும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கால், கையைப் பிடித்து பதவிகள் பெற்று வந்து மீண்டும், மீண்டும் தங்களை வளர்ப்பதிலேயும் திறமாய் இயங்கும் அரசியல்வாதிகளைப் பற்றி அவதூறு பேசுவதுவதிலேயுமே  இன்று சில அரசியல்வாதிகளின் வங்குறோத்து நிலமை மாறியுள்ளதனை நினைத்து கவலையடைகிறேன்.

    இன்று கிழக்கு மாகாணத்தை இலங்கை வரலாற்றில் ஒரு எடுத்துக்காட்டான மாகாணமாக மாற்றவேண்டும் என்று சேவைகள் செய்து கொண்டு வருகிறோம். இங்கு வாழும் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் அவர்களுக்கான சேவைகள் விகிதாசார முறையில் வழங்கப்பட்டு சரியான வேலைகளை முன்னெடுத்து வருகின்றோம். அதற்காக எமது அமைச்சர்கள் உறுதியுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறனர்.

    ஆனால் தங்களால் எதுவும் செய்ய முடியாமல் மக்கள் சேவைக்காக ஒதுக்கப்படும் நிதிகளில் கொள்ளையடித்து தன்னையும் தன் குடும்பத்தையும் குழுப்பாட்டும் அரசியல்வாதிகள் சிலர் கிழக்கு முதலமைச்சரின் நிலமையைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகி எங்கே எதனைப் பேசுவதென்று தெரியாமல் உளறித்திரிவதனை பல ஊடகங்களில் காணக்கிடைக்கிறது. சில்லறைத்தனமாக அரசியல் செய்வோருக்கு ஒருபோதும் அஞ்சும் முதலமைச்சராக கிழக்கு முதலமைச்சர் இருக்க மாட்டார்.  கடந்த பல ஆண்டுகளாக அரசியல் செய்யும் இவர்களால் கிழக்கு மக்கள் கண்ட பலன்கள் என்ன. இன்று  பட்டதாரிகள் இருந்து,  ஊளியர்கள் வரை ஏராளமான இளைஞர் யுவதிகள் எந்த தொழில் வாய்ப்பும் இல்லாமல் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று செய்கின்றனர்.

     எனவே இதற்க்கெல்லாம் பொறுப்புக்கூற வேண்டிய இவர்கள் எனது சேவையினைப் பார்த்து பொறாமை பிடித்து உளறித்திரிவதற்க்கு மக்கள்தான் பதில் கூற வேண்டும் என்றார்

    என் ஆட்சிக்காலத்தில் கிழக்கில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி விட்டே ஓய்வு பெறுவேன். மக்களின் தேவைகளைச் சிறந்த முறையில் பூர்த்தி செய்யும் ஒரு முதலமைச்சராக கிழக்கு முதலமைச்சர் செயற்படுவார். செயற்படுகிறார் என்பதனை இப்படியான கேவலம் கெட்ட அரசியல் செய்வோர் விளங்கிக் கொள்ள வேண்டும்என்று முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனதுரையில் குறிப்பிட்டார்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சில்லறைத்தனமாக அரசியல் செய்வோருக்கு அஞ்சமாட்டேன்: கிழக்கு மாகாண முதலமைச்சர் சூளுரை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top