கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரும் விசாரணைகளுக்காக காங்கேசன்துறை கடற்படைமுகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்கள் ஸ்ரீலங்கா கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடுவதும், பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுவதும் தொடர்கதையாகவே இருந்து வருகின்றது.
கச்சதீவு அருகே அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் நேற்று திங்கட்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது, அந்த மீனவர்களின் 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வான தைப்பொங்கல் திருநாளை முன்னி்ட்டு மூன்று நாள் விடுமுறைக்குப்பின் நேற்று காலை இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியிலிருந்து சுமார் ஆயிரத்து 200 க்கும் மேற்ப்பட்ட விசைபடகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
இதன்போது, தங்கச்சிமடம், இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 16 மீனவர்கள் ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களில் சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் மீனவர் பூன்டிராஜ் என்பவருக்கு அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்தால் மீனவர் சமூகம் எழுச்சி பெறும் நிலைமை உருவாகும் என மீனவரான எடிசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்படுகின்றமைக்கு இந்திய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த தமிழ்நாடு விசைபடகு மீனவர் சங்க செயலாளர் சேசுராஜ், இந்த தொடர் கைது சம்பவங்களால் பல இலட்சக்கணக்கான மீனவ குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தற்போது வரை இலங்கை சிறைகளில் 115 தமிழக மீனவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது 175 படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன
.

0 comments:
Post a Comment