தேர்தல் நடத்துவது சம்பந்தமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் சுயாதீன குழுக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள தேர்தல் ஆணையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த கலந்துரையாடலில் தேர்தல் ஆணையகத்தின் மேலதிக ஆணையாளரை பங்கேற்க செய்ய எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணம், தென் மாகாணம், புத்தளம்,கண்டி, அனுராதபுரம், மட்டக்களப்பு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் சுயாதீன குழுக்களின் தலைவர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளது.
இந்தக் கூட்டம் 18 ம் திகதி கொழும்பிலும் 19 ம் திகதி கண்டியிலும் 20 ஆம் திகதி வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இடம்பெறவுள்ளது.

0 comments:
Post a Comment