இலங்கையின் பூகோள ரீதியிலான வரைபடத்தை புதிதாக தயாரிப்பதற்கு நில அளவை திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது புதிய இலங்கை வரைபடம் 1,50 000, 92 ஸ்கோப்பிங் வரைபடமாக அமைந்துள்ளதாகவும். இதில் 65 ஸகோப்பிங் பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதுடன் எஞ்சிய 25 ஸ்கோப்பிங் வரைபடங்கள் எதிர்வரும் சில மாதங்களில் பூரணப்படுத்தப்படவுள்ளதாகவும் அரச நில அளவையாளர் பி.எம்.பி உதய காந்த தெரிவித்தார். 18 வருடங்களிற்கு பிறகு வரையப்படும் வரைபடத்தில் இக்காலப்பகுதியில் இலங்கை நிலப்பரப்பில் மாற்றங்கள் பல இடம்பெற்றுள்ளன. புதிய வரைபடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் கொழும்பு நகரமும் உள்வாங்கப்படவுள்ளது. இலங்கையின் தெற்கு மற்றும் கிழக்கு கரையோர பகுதிய நீண்டிருப்பதை காணக்கூடியதாக இருப்பதுடன் சிலாபக் கரையோரப்பகுதி; குறைவடைந்திருப்பதாகவும் உதய காந்த தெரிவித்தார். இலங்கையின் புதிய வரைபடம் செய்மதி தொழிநுட்பத்தை பயன்படுத்தி வரையப்படுவதுடன் அதன் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன் புதிய வரைபடத்தை நிலஅளவையாளர் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பார்வையிடலாம் என்றும் நிலஅளவையாளர் தெரிவித்தார்.
January 16, 2018
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment