- வினோத் -
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக் கோயிலில் இந்திய தொழில் துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் ராமசந்தரபிரசாத்சிங் தலைமையில் வடமாநிலத்தை சேர்ந்த 17 எம்.பிக்களும் தமிழ்நாட்டை சோந்த அரக்கோணம் நாடாளு மன்ற உறுப்பினர் அரி வடமாநிலத்தை சேர்ந்த எம்.பிக்களான ராம நரேன் துடி, கைலாஷ் பந்தாரி; உள்பட 18 எம்.பிக்கள் திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
இவர்களுக்கு அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.அரி நினைவு பரிசுகளை வழங்கினார். இந்த தொழில்துறை நிலைக்குழுவானது முன்னதாக ஆந்திரா மாநிலம் திருப்பதியில் சாமி தரிசனம் செய்து விட்டு திருப்பதியில் தொழில் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யபட்டிருத நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திருத்தணியில் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த இவர்களுக்கு பிரசாதங்களை தக்கார் ஜெயசங்கர் வழங்கினார்.
திருக்கோயிலில் ஒரே நேரத்தில்; 18 எம்.பி.க்கள் சாமி தரிசனம் செயவது இதுவே முதன் முறை இவர்கள் இந்த நிகழ்ச்சி முடித்து கொண்டு இந்தியன் ஓவர்சியஸ் வங்கியின் துணை பொது மேலாளர் நகராஜராவ் ஏற்பாட்டின் பேரில் இந்திய தொழில்துறை நாடாளுமன்ற நிலைக்குழுவின் நிகழ்ச்சிக்கு இந்த குழு சென்றது. இதற்கான ஏற்பாடு ஏற்பாடுகளை நாடாளு மன்ற நிவைக்குழுவின் இயக்குநர் சசிகலாநாயர் மற்றும்ட பலர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் திருத்தணி நகர செயலாளர் சௌந்தர், ஒன்றிய செயலாளர்கள் இ.என்.கண.டிகை இரவி, பள்ளிப்பட்டு சீனிவாசன், கூட:டுறவு சொசைட்டி தலைவர் ஜெயசேகர்பாபு, கேபிள்சுரேஷ், எஸ்.கே.குமார், உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


0 comments:
Post a Comment