• Latest News

    January 17, 2018

    லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா

    - எம்.எஸ்.எம்.ஸாகிர் -

    சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா மற்றும் பாடசாலைக்கு கணனி தொகுதிகளை கையளிக்கும் நிகழ்வு  பாடசாலையின் அதிபர் எம். ஐ. எம். இல்யாஸ் தலைமையில் இடம்பெற்றது.

    இதில் பிரதம அதிதியாக சிம் கெம்பஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்  அன்வர் ஏ முஸ்தபா கலந்து கொண்டதோடு,  சாய்ந்தமருது 15-17 பிரிவின் கிராம சேவை நிலதாரி எல். நஸார் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டார்.

    இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரின் மூலமாக 5 கணனிகளை பாடசாலைக்கு பெற்றுக் கொடுத்தமைக்காக சிம் கெம்பஸ் பணிப்பாளர் அன்வர் ஏ. முஸ்தபாவைப் பாராட்டி ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் சார்பாக பாடசாலையின் அதிபரினால் நினைவுச் சின்னமும் நிகழ்வின் போது வழங்கப்பட்டது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top