• Latest News

    May 06, 2019

    முஸ்லிம்களின் மீததான வன்முறையை பாதுகாப்பு தரப்பு கட்டுப்படுத்தியுள்ளது

    நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலே இனவன்முறையாக மாற்றப்பட்டுள்ளது. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே வேண்டுமென்று இந்த இனவன்முறையை அரங்கேற்றியுள்ளார்கள்.

    கடலில் குளிக்கச் சென்ற 04 முஸ்லிம் இளைஞர்களின் மீது அங்கிருந்த சிங்கள கும்பல் ஒன்று வேண்டுமென்று தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்கள்.

    இதன் பின்னர் இத்தாக்குதல்களை இன  ரீதியானதொரு மோதலாக மாற்றியுள்ளார்கள்.  இதனைத் தொடர்ந்து  ஆயுதங்களுடன் வருகை தந்த குழுவினர் மோதலுக்கு தயாராகி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்கள்.

    இதனிடையே குறிப்பிட்ட இடத்திற்கு பாதுகாப்பு தரப்பினர் வருகை தந்துள்ளனர். எனினும், முஸ்லிம்களின் கடைகள் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.

    இதே வேளை, இன்னுமொரு கும்பல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்த உடமைகளையும், வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளார்கள்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்களின் மீததான வன்முறையை பாதுகாப்பு தரப்பு கட்டுப்படுத்தியுள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top