• Latest News

    May 06, 2019

    பொரளை பகுதியில் வெடிப்பு..?: சம்பவ இடத்திற்கு விரையும் பொலிஸார்..! (வீரகேசாி)

    பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனாத்தமுல்லை பகுதியில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 
    பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனாத்தமுல்லை பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் பாரிய வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகப் பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
    சம்பவம்  தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பிரதேசத்தில் மின் பிறப்பாக்கியொன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக  குறித்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், வீடொன்று பற்றியெரிந்துள்ளதாகவும்,  3 பேர் தீக்காயங்களுக்குள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பொலிஸாரிற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
    இந்நிலையில், பொலிஸாரும், தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன.
    மேலும், குறித்த வெடிப்புச் சம்பவம் காரணமாக, அப்பகுதி முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
    சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொரளை பகுதியில் வெடிப்பு..?: சம்பவ இடத்திற்கு விரையும் பொலிஸார்..! (வீரகேசாி) Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top