• Latest News

    May 03, 2019

    யாழ். பல்கலைக் கழகத்தில் பிரபாகரனின் புகைப்படம், இராணுவத்தின் சப்பாத்துக்கள் மீட்டு - இருவர் கைது

    யாழ். பல்கலைக் கழக வளாகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள், தொலைநோக்கிக் கருவி மற்றும் இராணுவம் பயன்படுத்தும் சப்பாத்துக்கள் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியக் கட்டிடத்தில் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகத்தின் பேரில் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர்களை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

    இன்று (03.05.2019) காலை யாழ். பல்கலைக் கழகத்தின் வளாகங்கள், விடுதிகள் என்பன படையினர் கடும் சோதனைக்கு உட்படுத்தினார்கள். இதன் போது மாணவர் ஒன்றியத்தின் அலுவலகமும் சோதனைக்கு உள்ளானது. 

    இச்சோதனையின் போது மாணவர் ஒன்றியத்தின் அலுவலகத்திலும், மாணவர் விடுதியிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படங்கள், தொலைநோக்கி கருவி மற்றும் இராணுவத்தினர் பயன்படுத்தும் சப்பாத்துக்கள் ஆகியவற்றை படையினர் கைப்பற்றியதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர்களை கைது செய்து விசாரணைக்காக படையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: யாழ். பல்கலைக் கழகத்தில் பிரபாகரனின் புகைப்படம், இராணுவத்தின் சப்பாத்துக்கள் மீட்டு - இருவர் கைது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top