• Latest News

    May 03, 2019

    யாழ். பல்கலைக் கழகத்தில் மிதிவெடி மற்றும் கிளைமோர் மீட்பு. அவை போலி எனவும் தெரிவிப்பு

    யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின்  ஆய்வு கூடத்தில்  மிதிவெடி மற்றும் கிளைமோர் ஆகியன படையினரால் கைப்பற்றப்பட்டன.

    ஆயினும், கைப்பற்ற மிதிவெடி மற்றும் கிளைமோர் இராணுவத்தினரின் பரிசோதனையின் போது போலியானவை என அறியப்பட்டுள்ளது. அவை கண்காட்சிக்காகச் செய்யப்பட்டவையாக இருக்கலாம் என இராணுவம் தெரிவித்துள்ளது.  

    யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று படையினர்  சுற்றிவளைப்புத் தேடுதலைகளை மேற்கொண்டனர்.  இதன்போது  மருத்துவபீடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பான ஜொனி மிதிவெடி மற்றும் கிளைமோர் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

    எனினும் குண்டு செயலிழக்க வைக்கும் படைப் பிரிவினர் நடத்திய பரிசோதனையில் அவை போலியாக தயாரிக்கப்பட்டவை எனக் அறியப்பட்டது. அவை  கண்காட்சி ஒன்றுக்குத் தயாரிக்கப்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: யாழ். பல்கலைக் கழகத்தில் மிதிவெடி மற்றும் கிளைமோர் மீட்பு. அவை போலி எனவும் தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top