கொரனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதனால், பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றார்கள். மக்களின் இடர்பாடுகளை கலைவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகின்றது.
அரசாங்கத்தின் மற்றுமொரு நடவடிக்கையாக அரச வங்கிகளை ஊரடங்கு வேளையிலும் இயங்குவதற்குரிய உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைய நிந்தவூர் மக்கள் வங்கி வாடிக்கையாளர்களின் நலன்களை கருத்திற் கொண்டு தமது வழமையான சேவைகளை இன்று முதல் மேற்கொண்டு வருவதாக வங்கியின் முகாமையாளர் பி.நசுறுதீன் தெரிவித்தார்.

வங்கியின் இந்த நடவடிக்கை குறித்து பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைகளை வங்கிக்கு நேரடியாக வருகை தந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பூர்த்தி செய்து கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment