• Latest News

    September 18, 2021

    தற்போதைய அரசாங்கத்திற்கு கல்வியில் தேர்ச்சிபெற்ற புத்திஜீவிகள் தேவையில்லை - பாட்டலி சம்பிக்க ரணவக்க

     மாணவர்களுக்கு இயலுமானவரை விரைவாக கொவிட் - 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொடுத்து பாடசாலைகளை மீளத்திறப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை.

    தற்போதைய அரசாங்கத்திற்கு கல்வியில் நன்கு தேர்ச்சிபெற்ற புத்திஜீவிகள் தேவையில்லை. மாறாக துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டி, அடாவடித்தனத்தில் ஈடுபடுபவர்களே இந்த அரசாங்கத்தின் விருப்பத்திற்குரியவர்களாவர் என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

    அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, 

    ஆசிரியர்கள் அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் செயற்படுவதாகக் கூறுகின்றனர். ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் கொழும்பில் பெரும்பான்மையான ஆசிரியர்கள் கோட்டாபய ராஜபக்ஷவிற்கே வாக்களித்தனர். ஆகவே அவர்களது போராட்டத்தின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

    அடுத்ததாக மாணவர்களுக்கு இயலுமானவரை விரைவாக கொவிட் - 19 தடுப்பூசியைப் பெற்றுக் கொடுத்து பாடசாலைகளை மீள திறப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை. தற்போதைய அரசாங்கத்திற்கு கல்வியில் நன்கு தேர்ச்சிபெற்ற புத்திஜீவிகள் தேவையில்லை. மாறாக துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டி, அடாவடித்தனத்தில் ஈடுபடுபவர்களே இந்த அரசாங்கத்தின் விருப்பத்திற்குரியவர்களாவர்.

    இவ்வாறானதொரு சூழ்நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசியை வழங்கி, எதிர்வரும் நவம்பர் மாத ஆரம்பத்திலிருந்து பல்கலைக்கழகங்களை மீளத்திறப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

    அரசாங்கம் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் அச்சமடைந்திருப்பதன் காரணமாகவே பல்கலைக்கழகங்களை மீளத்திறப்பதைத் தாமதிக்கின்றது. எனவே தமது பிள்ளைகளின் கல்வி உரிமைக்காக முன்வந்து குரலெழுப்புமாறு பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர்களுக்கு அழைப்புவிடுக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தற்போதைய அரசாங்கத்திற்கு கல்வியில் தேர்ச்சிபெற்ற புத்திஜீவிகள் தேவையில்லை - பாட்டலி சம்பிக்க ரணவக்க Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top