ஆனால், அம்பாரை மாவட்டத்திலிருந்து மு.கா சார்பில் - கடந்த 4 தடவைகளாகத் தெரிவுசெய்யப்பட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் - தமது சுயலாபத்திற்காக மட்டும் செயற்படுவதாலும் - கட்சியினதும் கட்சித்தலைமையினதும் கட்டுப்பாட்டை மீறிச் செயற்படுவதாலும்;
✅ ஒட்டு மொத்த சமூகத்தினதும்
✅ அம்பாரை முஸ்லிம்களினதும
✅ கட்சியினதும் நலன்கள் - மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து நிற்கின்றன.
இனியும் இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை விட்டுவைத்தால் - ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கட்சிக்கும் #பாடை #கட்டி விடுவார்கள்.
எனவே, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்கள் - இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்களை தூக்கி வீசிவிட்டு - அதனால் வருகின்ற எந்தச் சவாலாக இருந்தாலும் அதனை முகங்கொடுக்க - எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் #அம்பாரையில் #களமிறங்க முன்வர வேண்டும் என - தூய்மையான கட்சிப் போராளிகள் & ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதாவுல்லாவும், அன்வர் இஸ்மாயிலும் கட்சியிலிருந்து வெளியேறி - அம்பாரையில் பெரும் சவாலாக மாறிய போது - தலைவர் றஊப் ஹக்கீம் அவர்கள் அம்பாரையில் தேர்தலில் களமிறங்கி - அச்சவால்களை உடைத்தெறிந்து வெற்றிக்கொடி நாட்டிய முன்னுதாரமும் இதற்குண்டு.
கண்டியில் களமிறங்கி ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் பெறுவதை விடவும் - அம்பாரையில் அடைந்து வரும் பின்னடைவு - #சமூகத்திற்கும் #கட்சிக்கும் #மிகப்பெரிய #ஆபத்து என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கண்டியில் தலைவர் களமிறங்காவிடின் ஒரு எம்பியை இழக்கலாம் என்றிருப்பினும் - பெரும்பான்மைக் கூட்டுக்கட்சியோடு இணைந்து அம்பாரையில் 03 எம்பிக்களைப் பெறமுடியும் என்பது - #இழப்பினை #ஈடுசெய்யும் வழியாக மாறும்.
அது மாத்திரமன்றி, இன்ஷா அல்லாஹ் கூட்டுக்கட்சி வெற்றிபெற்றால் - ஒரு அமைச்சரவை அந்தஷ்த்துள்ள அமைச்சராகவும் - அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கண்டி மாவட்டங்களின் #மாவட்ட #ஒருங்கிணைப்புக் #குழுக்களின் (DCC) தலைவராக / இணைத்தலைவராகவும் இருந்து - நிறையவே பணியாற்ற முடியும்.
எனவே, இனியும் #மன்னிப்பு #வழங்கி - சோரம்போய்விட்ட எம்பிக்களையே களமிறக்கி #சமூகத்தினதும் - #அல்லாஹ்வினதும் #சாபத்தின் #பங்காளியாக ஆகிவிடாமல் - இந்த எம்பிக்களைத் தூக்கிவீசிவிட்டு - அம்பாரையில் களமிறங்க தலைவர் றஊப் ஹக்கீம் அவர்கள் தயாராக வேண்டும் தூய்மையான கட்சிப் போராளிகள் & ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு.
மேலும், சமூகத்தின் அமானிதத்தை இந்த எம்பிக்கள் ஒவ்வொரு முறையும் மீறும் போது - தலைவரின் பூரண சம்மதத்தோடுதான் இவை நடக்கின்றன என்ற - கடந்த 20 வருட #அபாண்டத்தைக் #கழுவிச் #சுத்தப்படுத்த - இதனை விட வேறு வழியில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.
A.L.Thavam
https://www.facebook.com/share/p/ecLpE5U5kyJ4LT69/?mibextid=oFDknk
0 comments:
Post a Comment