• Latest News

    May 09, 2024

    நண்பியை தகாத நடவடிக்கைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் கைது

     தெற்கு ஐரோப்பாவின் - மோல்டாவில்(Malta) தனது முன்னாள் நண்பியை தகாத நடவடிக்கைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    32 வயதான இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவத்தின் போது, வன்முறை, பெண்ணின் எனினும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் தற்போதுவரை நீதிமன்றில் சாட்சியமளிக்கவில்லை என கூறப்படுகிறது.இந்தநிலையில் அவரை பிணையில் அனுமதிப்பது சாத்திமில்லாத ஒன்று என அந்த நாட்டின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    மோல்டாவுக்கு இலங்கையுடன் இருதரப்பு ஒப்பந்தங்கள் இல்லை.

    எனவே அவர் பிணைக்கு பின்னர் தலைமறைவானால், அவரை மீண்டும் விசாரணைக்கு அழைத்து வர வழி இல்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

    இதனையடுத்து பிணைக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.சம்மதம் இல்லாமை, அச்சுறுத்தல், தொலைத்தொடர்பு சாதனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கள் குறித்த இலங்கையர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நண்பியை தகாத நடவடிக்கைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் கைது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top