
திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பறக்கத்துல்லாவுக்கும் கல்முனை பௌத்த விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (2013.12.28) அன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பில் சமகாலத்தில் கல்முனையில் ஏற்பட்டுள்ள பிரதேச செயலக விடயம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும் முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகத்தவர்களுக்கும் இடையில் நிலவிவந்த அரசியல் உறவுகள் பற்றியும், தமிழ்-முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமை பற்றியும் விளக்கங்கள் வழங்கப்பட்டது.
(ஏஎம்பி)
0 comments:
Post a Comment