கல்முனை பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றிவரும் அனைவரையும் பொருளாதார அமைச்சின் திவிநெகும திணைக்களத்திற்குள் உள்வாங்கப்பட்டு நிரந்த நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (2013.12.29) பிரதேச செயலாளர் எம்.நௌபல் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்திக்குழு தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நியமன கடிதங்களை வழங்கி வைத்தார்.
(ஏஎம்பி)
0 comments:
Post a Comment