• Latest News

    December 27, 2013

    வருடத்தின் ஆகக் குறைந்த வெப்பநிலை நுவரெலியாவில் பதிவு!

    இந்த ஆண்டில் பதிவான ஆகக் குறைந்த வெப்பநிலை இன்று நுவரெலியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் 4.9 செல்சியஸ் வெப்பநிலை நுவரெலிய மாவட்டத்தில் இன்று (27) பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
    இந்த ஆண்டில் பதிவான ஆகக் குறைந்த வெப்பநிலை இதுவாகும். இலங்கைக்கு கிடைக்கப்பெறும் காற்று வடகிழக்கு திசை நோக்கி வீசுகின்றமை மற்றும் தற்போது நாட்டில் வடமேல் பருவப் பெயர்ச்சி காலநிலை நிலவுகின்றமையுமே இதற்கு காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தக் காலநிலை இன்னும் இரண்டு நாட்கள் நீடிக்கும் எனவும் வானிலை அவதான நிலையத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வருடத்தின் ஆகக் குறைந்த வெப்பநிலை நுவரெலியாவில் பதிவு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top