வலி.கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வலி.கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கூட்டமைப்பினர் வரவு செலவுத் திட்டங்களை தோற்கடிக்க வேண்டாம் என்று கட்சியினால் கடும் உத்தரவு வழங்கப்பட்டது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வலி.கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து வலி.கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆயினும் கூட்டமைப்பின் இரு உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.
இதேவேளை வலி.கிழக்கு பிரதேச சபையில் கூட்டமைப்பினர் 16 உறுப்பினர்களும் அரசாங்க பங்காளிக் கட்சியான ஈ.பி.டி.பி யின் சார்பில் 5 உறுப்பினர்களும் உள்ளனர்.
0 comments:
Post a Comment