அகமட் எஸ். முகைடீன்;
கல்முனை மாநகர சபையானது முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் இல்லாத ஒரு மாநகர சபை என இலங்கை நிர்வாக சேவையின் மூன்றாம் தர உத்தியோகத்தரான ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்திருக்கும் கருத்தும் அவரது செயலும் தொடர்பற்று காணப்படுவது வேடிக்கையாகவும் வினோதமாகவும் அமைவதாக பிரதி முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையானது முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் இல்லாத ஒரு மாநகர சபை என இலங்கை நிர்வாக சேவையின் மூன்றாம் தர உத்தியோகத்தரான ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்திருக்கும் கருத்தும் அவரது செயலும் தொடர்பற்று காணப்படுவது வேடிக்கையாகவும் வினோதமாகவும் அமைவதாக பிரதி முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
சிராஸ் மீராசாஹிப் பிரதி முதல்வருமல்ல நிசாம் காரியப்பர் முதல்வருமல்ல என தெரிவித்து கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் சிராஸ் மீராசாஹிப் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் குறித்த இலங்கை நிர்வாக சேவையின் மூன்றாம் தர உத்தியோகத்தர் மேற்படி பதவிகள் இன்னும் வர்தமானியில் அறிவிப்பதற்கு முன்னதாகவே பிரதி முதல்வர் சிராஸ் மீராசாஹிப் என்றும் முதல்வர் நிசாம் காரியப்பர் என்றும் அலுவலக நடைமுறைக் கடிதங்களில் பாவித்திருக்கின்றார். அண்மையில் எனக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள 'கல்முனை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் – டிசம்பர் 2013' இற்கான அழைப்பு கடிதத்திலும் என்னை கௌரவ கல்முனை மாநகர பிரதி முதல்வர் எனக் குறிப்பிட்டுள்ளதோடு அவ்வறிவித்தல் கௌரவ முதல்வரின் கட்டளைக்கு அமைவானது எனவும் குறிப்பிட்டு ஆணையாளர் ஒப்பமிட்டுள்ளார்.
அத்தோடு பிரதி முதல்வருக்கான பொறுப்பேற்கும் கடிதத்தினை திங்கட்கிழமை (23.12.2013) காலை என்னிடமிருந்து பாரமெடுத்ததோடு பிரதி முதல்வருக்கான பிரத்தியேக அறையினையும் வழங்கியுள்ளார். இச்செயற்பாடுகள் ஆணையாளரது செய்திக்கும் நடைமுறைக்கும் பொருத்தப்பாடில்லாமல் இருக்கிறது. இவரது செய்தியானது பச்சட் ஒத்திவைப்பு நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தூண்டுதலின் பிரகாரம் வெளியிடப்பட்டதாகவே நினைக்கின்றேன். இலங்கை நிர்வாக சேவையின் மூன்றாம் தர உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் நடத்து கொள்வது மிகவும் கவலையான விடயமாகும். தகுதிக்கு மீறிய பொறுப்புக்கள் வழங்கப்படும்போது இப்படித்தான் நடக்கும். இதனால்தான் கல்முனை மாநகர சபையின் நிர்வாக சீர்கேடுஇ சீர்செய்ய முடியாத ஒன்றாக காணப்படுகிறது. சட்ட திட்டங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்துவைத்திருப்பதில் மாத்திரம் பலன் இல்லை. அதனை செயற்படுத்துகின்ற ஆற்றலும், திறனும், திடகாத்திரமும் இருக்க வேண்டும். சேற்றில் நாட்டிய கம்பானால் பின் விளைவுகள் விபரீதமாகிவிடும்.
இவ்வாறான பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருப்பவர்கள் எடுப்பார் கைப்பிள்ளையானல் சரியான சட்ட திட்டங்களை அமுல்படுத்துவது முடியாத விடயமாகும். இதனை நிரூபிப்பதாகவே கல்முனை மாநகர சபை புதிய முதல்வரின் எடுபிடியின் அட்டகாசம் தொடர்பில் செய்திகள் வெளிவந்ததும் அதனைக் கண்டும் காணமலும் ஆணையாளர் இருந்ததும் அமைவதாக கருதுகின்றேன்.
எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் எங்களது பெயர்கள் உரிய பதவிகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டு தேர்தல் ஆணையாளருக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆணையாளர் தேவையற்ற பிரச்சினையினை உருவாக்க விளைவதைனையே அவதானிக்க முடிவதாக தெரிவித்தார்.
0 comments:
Post a Comment