• Latest News

    December 28, 2013

    காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் இராஜினாமா!

    காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் இன்று தமது  பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்

    அம்பாறை மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா இராசையா தனது தவிசாளர் பதவியிலிருந்து இன்று இராஜினாமா செய்துள்ளார்.

    காரைதீவு பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் இரண்டு தடவைகள் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆயினும், வரவு-செலவு திட்டம் ஒரு தடவைதான் வாக்களிப்புக்கு விடப்பட்டதாக தவிசாளர்
    செல்லையா இராசையா தெரிவித்திருந்தார். ஆனால், இதனை உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தப் பின்னணியிலேயே அவர் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

    செல்லையா இராசையாவின் தவிசாளர் பதவி  தொடர்பான இராஜினாமா கடிதம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் உப தலைவருமான பொன்.செல்வராசா ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பில் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா இராசையா அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுஇ

    காரைதீவு பிரதேச சபையின் தவிசாளராகிய நான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு அதிகபடியான வாக்குகளைப்பெற்று தவிசாளராக நியமிக்கப்பட்டேன்.

    இந்த நிலையில் எமது பிரதேசசபையின் செயற்பாட்டுக்கு பிரதேசசபையில் உள்ள ஏனைய மூன்று உறுப்பினர்களும் எனக்கு எதுவித ஒத்துழைப்புகளையும் வழங்குவதில்லை. பிரதேசசபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தரமால் தொடர்ந்து குழப்ப நிலைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

    இது தொடர்பில் கடந்த காலத்தில் பல தடவைகள் எமது கட்சி தலைமையின் கவனத்துக்கு கொண்டு சென்ற போதிலும் இது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே தொடர்ந்து செயற்பட முடியாத நிலையில் எனது பதவியை இராஜினாமா செய்கிறேன்.எனினும் கட்சியோ மக்களோ நான் மீண்டும் தவிசாளராக கடமையாற்றுமாறு தீர்மானித்தால் கடமையாற்றவும் தயாராகவுள்ளேன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் நடைபெற்ற சபையின் வரவு செலவுத்திட்டம் உறுப்பினர்களின் எதிர்ப்பினால் தோக்கடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் இராஜினாமா! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top