பி.எம்.எம்.ஏ.காதர்: மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மாணவன் மருதமுனையைச் சேர்ந்த ஏ.ஜே. அர்ஸாத் ஆத்தீஸ் சாரணியத்திற்கான ஜனாதிபதி விருதைப் பெற்றுள்ளார். இவருக்கான விருதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அண்மையில் கொழும்பு பண்டார நாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்த விருதை வழங்கினார.
சாரணியத்திற்கான இந்த விருதைப் பெறுவதற்கு காரணகர்த்தாக்களாக இருந்த மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபரும், தற்போத சம்மாந்துறை கல்வி வலயத்தின்;;பிரதிக்கல்விப் ;பணிப்பாளரமான டாக்டர் எஸ.;எம்.எம்.எஸ்.உமர்மௌலானா,அல்-மனார் மத்திய கல்லூரியின் தற்போத அதிபர் எம்.எம்.ஹிர்பஹான், ஆசிரியர்களான எம்.சி.ஏ.நஸார், ஐ.எல்.எம்.முஜீப் மாவட்ட சாரனிய ஆணையாளர் ஐ.எல்.ஏ.மஜீட், மாவட்ட சாரனிய உதவி ஆணையாளர் கே.எம்.தமீம் ஆகியோருக்கும் இவர் நன்றி தெரிவித்துக் கொண்டார் இவர் மருதமுனையைச் சேர்ந்த வர்த்தகர் ஏ.சி.அப்துல் ஜப்பார் சஹீலா தம்பதியின் இரண்டாவது புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment