![]() |
| அஜித் டோவல் |
இந்து சமுத்திரத்தில் மனித கடத்தல்கள்,
போதைப் பொருள் கடத்தல்கள், கடற்கொள்ளை என்பவற்றை தடுப்பதற்கு
நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மிக முக்கியமாகும் என்று
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தெரிவித்துள்ளார்
இந்து சமுத்திரத்தை அண்டிய
பிராந்தியங்கள் பல்லின சமூகங்களைக் கொண்ட நாடுகளாக அமைந்துள்ளன.
எனவே இங்கு அமைதியான தன்மை நிலைபெற வேண்டும். வெளிநாட்டவரின்
அநாவசிய இராணுவ பிரசன்னங்கள் தவிர்க்கப்பட வேண்டிய விடயங்களாகும்
என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
இலங்கை பயங்கரவாதத்தை தோற்கடித்தமை
பாராட்டுக்குரிய விடயமாகும். அதனூடாக பிராந்தியத்தின் பாதுகாப்பு
பலமடைந்துள்ளது. அதேவேளை இந்தியாவும் பிராந்தியத்தின்
பாதுகாப்பை உறுதிசெய்ய பாரிய பங்களிப்பைச் செய்துள்ளது என்றும் அவர்
கூறியுள்ளார்
காலியில் நேற்று ஆரம்பமான காலி
கலந்துரையாடல் எனப்படும் கடல் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு
உரையாற்றிய இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் இந்து சமுத்திரத்தை
அண்டிய பிராந்தியங்கள் பல்லின சமூகங்களை கொண்ட நாடுகளாக
அமைந்துள்ளன. எனவே இங்கு அமைதியான தன்மை நிலைபெற வேண்டும்.
வெளிநாட்டவரின் அநாவசிய இராணுவ பிரசன்னங்கள் தவிர்க்கப்பட
வேண்டிய விடயங்கள் ஆகும். 1971 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின்
யோசனைப்படிஇ இந்து சமுத்திர பிரதேசம் ஒரு சமாதான பிரதேசமாகும்.
எனவே இந்தப் பிராந்தியத்தில் அந்நிய இராணுவ பிரசன்னங் களுக்கு
இடமளிக்கக்கூடாது.
அயல் நாடுகளுடன் இந்தியாவுக்கு
சிறியளவிலான விவகாரங்கள் இருக்கலாம். ஆனால் மிகவும் நெருக்கமான
உறவை இந்தியா அயல் நாடுகளுடன் கொண்டுள்ளது. இந்தியா 5000
வருடங்களாக பிராந்தியத்தில் பலமான நாடாக இருந்துள்ளது. எனினும்
அயல் நாடுகளை ஆக்கிரமிக்கும் காரணம் இந்தியாவுக்கு இருந்ததில்லை.
எவ்வாறெனினும் கடற்கொள்ளை, மனித
கடத்தல்கள், போதைப் பொருள் கடத்தல்கள் போன்ற சவால்களை எதிர்கொள்ள
நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பு அவசியமாகும். சிறந்த கடல்
பாதுகாப்பு எதிர்காலத்துக்காக இலங்கை மற்றும் மாலைதீவுகளுடன்
இந்தியா நெருங்கிய உறவை மேலும் வலுவாக்கும்.
இந்து சமுத்திரத்தில் மனித கடத்தல்கள்,
போதைப்பொருள் கடத்தல்கள், கடற்கொள்ளை என்பவற்றை தடுப்பதற்கு
நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மிக முக்கியமாகும்.
போதுமான கடல்சார் பாதுகாப்பு
இன்மையினால் சில கிழக்காசிய நாடுகள் இன்னும் பல்வேறு இடையூறுகளை
சந்தித்துவருகின்றன. மனித கடத்தல்கள் மற்றும் போதைப்பொருள்
கடத்தல்கள் என்பன சில கிழக்காசிய நாடுகளை கடுமையாக பாதித்துள்ளன.
கடற்கொள்ளையானது இன்று புதிய வடிவத்தை பெற்றுள்ளது.
இதேவேளை இலங்கை பயங்கரவாதத்தை
தோற்கடித்தமை பாராட்டுக்குரிய விடயமாகும். அதனூடாக
பிராந்தியத்தின் பாதுகாப்பு பலமடைந்துள்ளது. அதேவேளை இந்தியாவும்
பிராந்தியத்தின் பாதுகாப் பை உறுதிசெய்ய பாரிய பங்களிப்பை செய்துள்ளது.
நாடுகள் இணைந்து முன்னெடுக்கும் ஆய் வுகள்,
இருதரப்பு உறவுகள், முறையான தொடர்பாடல் என்பன பிராந்தியத்தின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தும். அத்துடன் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும்
அபிவிருத்திக்கும் இவை உதவும் .

0 comments:
Post a Comment