• Latest News

    January 17, 2018

    காங்கேசன்துறை கடற்பரப்பில் ​வைத்து 70 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    காங்கேசன்துறை கடற்பரப்பில் ​வைத்து சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான  தங்க பிஸ்கட்டுகள் இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை (17) கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்க  பிஸ்கட்டுகள் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக கடத்தி செல்லப்படும் நிலையில், இலங்கை கடற்படையினர் நடத்திய சோதனையின் போதே இந்த தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    ஒவ்வொன்றும் 100 கிராம் நிறையுடைய தங்க கட்டிகளாக 70 தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவை மேலதிக விசாரணைக்காக இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காங்கேசன்துறை கடற்பரப்பில் ​வைத்து 70 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top