• Latest News

    January 17, 2018

    தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

    தவியை துஷ்பிரயோகம் செய்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

    தமது பதவி மற்றும் பொறுப்புக்களை துஷ்பிரயோகம் செய்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

    அவ்வாறான அரசாங்க அதிகாரிகளின் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

    அரசியல் உரிமைகள் அற்ற துறையை சேர்ந்த அரச அதிகாரிகள் எந்த சந்தர்ப்பத்திலும் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.

    அத்துடன் அலுவலக நேரங்களில் அரசியல் நடவடிக்கைககளில் ஈடுபட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

    தேர்தல் கட்டளைச்சட்டம், அரசியலமைப்பு தாபனக்கோவை மற்றும் நிர்வாக சுற்றறிக்கைக்கு இணங்க அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அரசாங்க அதிகாரிகள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி அரச சொத்துக்களை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top