• Latest News

    January 17, 2018

    பிப்ரவரி 21-ம் தேதி அரசியல் பயணத்தைத் துவங்க இருக்கிறேன் - கமல்

    ரும் பிப்ரவரி 21-ம் தேதி தமது புதுக் கட்சிக்குப் பெயர் அறிவித்து, தமது சுற்றுப் பயணத்தையும் அதன் மூலம் தமது அரசியல் பயணத்தையும் தொடங்க இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜனவரி 16ம் தேதி செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், தம்மை வளர்த்தெடுத்த சமூகத்துக்கு தாம் நிறைய நன்றி சொல்லியிருப்பதாகவும், அதைத் தாண்டி கடமைகள் நிறைய இருப்பதாகவும் கூறியுள்ள அவர்,

    "அக் கடமைகளின் தொடக்கமாக எம் மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து வருகிற பிப்ரவரி 21ம் தேதி துவங்க இருக்கிறேன். ஆரம்பச் சுற்றுப் பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன்.

    இது நீண்ட நாள்களாகத் திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான இந்த சந்திப்பு புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல. என் புரிதல், எனக்கான கல்வி," என்று தெரிவித்துள்ளார்.

    "தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக இருக்கும் ராமநாதபுரம் மண்ணில், பிப்ரவரி 21-ம் தேதி என் கட்சியின் பெயரை அறிவித்து என் அரசியல் பயணத்தைத் துவங்க இருக்கிறேன். இது என் நாடு, இதை நான் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் எனக்கு மாத்திரம் இருந்தால் போதாது.

    இங்கு தலைவன் என்பவன் வழிநடத்த மாத்திரமன்று, பின்பற்றவே தலைவன் இருக்கவேண்டும். பின் தொடர்வதற்கே ஒரு தலைமைப் பொறுப்பு இருக்கவேண்டும். நாமெல்லாம் சேர்ந்து இந்தத் தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் இருக்கவேண்டும்.

    அதுவே ஜனநாயகம். அந்த நாயகர்களை சந்திக்கத்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    "இது ஆட்சியைப் பிடிப்பதற்கான திட்டமா? என்று கேட்பார்கள். ஆட்சியை ஒரு தனி ஆள் பிடிக்க முடியுமா? யாரின் ஆட்சி, யாரின் அரசு. குடியின் அரசு. அப்படியென்றால் முதலில் அவர்களை உயர்த்தவேண்டும். அதற்கான கடமைகளை நினைவுபடுத்தவேண்டும்.

    அதை நோக்கியப் பயணம்தான் இது. உங்களின் ஆதரவோடு இந்தப் பயணத்தைத் தொடங்குகிறேன். கரம் கோர்த்திடுங்கள். களத்தில் சந்திப்போம்," என்று கமல் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிப்ரவரி 21-ம் தேதி அரசியல் பயணத்தைத் துவங்க இருக்கிறேன் - கமல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top