• Latest News

    January 19, 2018

    காத்தான்குடியில் வேட்பாளரின் வீடும், வாகனமும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

    - சஹாப்தீன் -

    மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டியல் வேட்பாளர் ஒருவரின் வீடு மற்றும் வாகனம் ஒன்றும் இனந் தெரியாத நபர்களினால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது. வீடும், வாகனமும் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளது.
    இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
    காத்தான்குடி நகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டியல் வேட்பாளராக போட்டியிடும் முஹம்மது காசிம் அப்துல் கையூம் என்பவரின் வீடும், வட்டா ரக வாகனமுமே இன்று அதிகாலை இனந் தெரியாத நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.
    இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதனை அவதானித்த வேட்பாளரும், அவரது குடும்பத்தினரும் தீயை அணைப்பதற்கு அக்கம் பக்கதில் உள்ளவர்களை தீயை அணைப்பதற்கு துணைக்கு அழைத்துள்ளார்கள். அயலவர்களின் உதவியுடன் தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டாலும், வாகனமும், வீடும் பெரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
    இச்சம்பவம் பற்றி காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டியல் வேட்பாளரின்  வீடும், வாகனமும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளமையால் இது மாற்றுக் கட்சியினரின் நடவடிக்கையாகவே கருதப்படுகின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காத்தான்குடியில் வேட்பாளரின் வீடும், வாகனமும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top