முஸ்லிம் ஒருவாின் வீட்டில் வெடிபொருளை மறைத்து வைப்பதற்கு முற்பட்ட 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் வெல்லவாய - மஹவெல்லகம எனும் இடத்தில் நடைபெற்றுள்ளது.
வெடிபொருள் மறைத்து வைப்பதற்கு முற்பட்ட வீட்டின் உாிமையாளர் பள்ளிவாசலுக்கு சென்று தொழுதுவிட்டுத் திரும்பும் போது, தனது வீட்டின் முன்னால் சிலர் சந்தேகிக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருந்த அவதானித்துள்ளார். அவர் உடனடியாக பொலிஸிற்கு சம்பவத்தை தொிவித்துள்ளார்.
அங்கு விரைந்த பொலிஸார் குறிப்பிட்ட இடத்தில் நடமாடிக் கொண்டிருந்தவர்களை சோதனையிட்ட போது அவர்களிடம் வெடிபொருள் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். அத்தோடு, நடமாடிக் கொண்டிருந்த 06 பேரையும் கைது செய்துள்ளார்கள்.
இவர்கள் இனங்களுக்கு இடையே முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்காக வெடிபொருளை குறிப்பிட்ட முஸ்லிம் நபாின் வீட்டில் மறைத்து வைப்பதற்கு வந்ததாக தொிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment